உலகின் உயர்ந்த இடத்தில் இருந்து மறைந்த வனஅதிகாரிக்கு அஞ்சலி செலுத்திய வன அலுவலர்

மறைந்த மணிகண்டன் படத்துடன் விக்ரம்

லகின் உயர்ந்த இடமான எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்துள்ள கர்நாடக வனத்துறையை சேர்ந்தவர்கள், அங்கு தங்களது அதிகாரி பலியான மணிகண்டன் என்பவரின் படத்தை காட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடகாவில் உள்ள வெரனாகோசாஹாலி வனப்பகுதியில்  உள்ள நாகரகோலே என்ற வனப்பகுதியில் உள்ள புலிகள் காப்பத்தில் வனத்துறை அதிகாரியாக இருந்து வருபவர் விக்ரம். இவர் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் எறி சாதனை படைத்துள்ளார்.

உலகின் உயர்ந்த இடமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த விக்ரம், தனக்கு பேருதவியாக இருந்தவரும,   தன்னுடன் பணியாற்றிய மறைந்த வன அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அவரது படத்துடன் எவரெஸ்ட் சிகரத்தில் அமர்ந்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த  மணிகண்டன் ஐஎப்.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.