டில்லி

ந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங்காக நிலவில் தரையிறங்கியது என்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் பகுதி நிலவில் தரை இறங்கும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு தொடர்பு அறுந்ததால் அதைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் போனது.    இந்த பகுதி சிறிது சிறிதாக வேகம் குறைந்து மெதுவாகத் தரையிறங்குவதற்கு ஆங்கிலத்தில் சாஃப்ட் லேண்டிங் எனவும் வேகமாகச் சென்று தரையில் மோதி இறங்குவதற்கு ஹார்ட் லேண்டிங் எனவும் குறிப்பிடுவது வழக்கமாகும்.

 

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் தரையிறங்கியது என்பது அனைவரும் ஊகித்த ஒன்று தான்.  ஆயினும், அது பற்றிய எந்த கருத்தையும் இதுவரை வெளியிடாமல் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மௌனமாக இருந்து வந்தது.

நிலவில் தரையிறங்கி சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இஸ்ரோ தற்போது அதன் தரையிறக்கும்  ஹார்ட் லாண்டிங்காக நிகழ்ந்தது என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  செப்டம்பர் மாதம் இஸ்ரோ தலைவர் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடும் போது லாண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.  அதைத் தவிர வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடாமல் இருந்தார்

நேற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில், மக்களவையில்  மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் இது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அவர் தனது பதிலில், ”நிலவில் தரையிறங்குவதற்காக விக்ரம் லாண்டரின் வேகத்தைக் குறைத்து இஸ்ரோ வடிவமைத்திருந்தது.  இருப்பினும், தரையிறங்கும் நேரத்தில் அதன் வேகம் குறையாதது தான் இந்த ஹார்ட் லாண்டிங்கிற்கு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.