முத்தையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விக்ரம் பிரபு….!

‘தேவராட்டம்’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் முத்தையா.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது .

தன் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விக்ரம் பிரபு நடித்து வரும் இந்தப் படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பும், சன் நெக்ஸ்டிலும் வெளியாகவுள்ளது.

இதற்கு ‘பேச்சி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை .