படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ . இந்த படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.
விக்ரம் பிரபு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார்.வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.


பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் முதன் முறையாக தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தேசிய விருது பெற்ற கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.