இணையத்தில் வைரலாகும் விக்ரமின் சிக்ஸ்பேக் புகைப்படம்….!

‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘கோப்ரா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம்.

‘கோப்ரா’ படத்தில் பல்வேறு கெட்டப்களில் நடித்துள்ளார் விக்ரம். அந்தப் படத்தின் போஸ்டரில் இருந்த கெட்டப்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதனிடையே, தற்போது விக்ரம் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விக்ரமின் புகைப்படத்தைப் பலரும் ஷேர் செய்யவே #ChiyaanVikram, #Vikram ஆகிய ஹேஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.