இந்தியில் ‘ரீ-மேக்’ ஆகும்  ‘விக்ரம் வேதா’ : விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷன்..

மாதவனும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் நல்ல வசூல் பார்த்த படங்களில் ஒன்று.

புஷ்கர்- காயத்ரி இயக்கி இருந்தனர். இந்த படம் இந்தியில் ’ரீ-மேக்’ செய்யப்படுகிறது.

புஷ்கர்-காயத்ரி ஜோடியே, இந்தி படத்தையும் டைரக்டு செய்கிறார்கள்.

விக்ரம் வேதாவில், விக்ரம் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் மாதவன் நடித்திருப்பார்.

மாதவன் வேடத்தில், சயீப் அலி கான் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில், ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார்.

இந்த வேடத்தில் முதலில் அமீர்கான் நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தாலோ, அவர் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

– பா. பாரதி