தீபாவளிக்கு முன் ’கோப்ரா’ படப்பிடிப்பு முடிக்க திட்டம்..

சியான் விக்ரமின் கோப்ரா படக்  குழு தீபாவளிக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்பை முடிக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் நோயை தொற்று பரவியதால் ரஷ்யாவிலிருந்து கோப்ர பட குழு திருப்பி வந்தது. வரும் அக்டோபரில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்படுகிறது.


இப்படத்தை இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். கோப்ரா ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர். இதில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர்.  இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவை ஹரிஷ் கண்ணன் கையாளுகையில், எடிட்டிங் புவன் சீனிவாசன்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் ஏழு வித்தியாசமான தோற்றங்களில் காணப்பட்டார், அது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. கோரா படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும்.