டிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகர் விக்ரம். இவரது மகன் துருவ்.

விக்ரம் நேற்று (ஞாயிறு) தனது மகனின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் பிரபலமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் ரிமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் இயக்குனர் உட்பட மற்ற டெக்னீஷியன்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரமின் மகன் துருவ், சமூக வலைதளங்களில் டப்ஸ்மேஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.