விக்ரம் மகனின் முதல் பட டீசர் வெளியீடு

சென்னை

பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிக்கும் முதல் படமான பாலா இயக்கத்தில் உருவான வர்மா பட டீசர் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற படங்களில் ஒன்று அருஜுன் ரெட்டி.   இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவும் ஷாலினி பாண்டேவும் நடித்திருந்தனர்.   இந்த படத்தை இயக்கியவர் சந்தீப் லங்கா.   விமர்சகர்கள் மத்தியில் மட்டுமின்றி வசூலிலும் முதல் இடத்தை பிடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

தமிழில் இதே படம் வர்மா என்னும் பெயரில் உருவாகி உள்ளது.   இயக்குனர் பாலாவின் கை வண்ணத்தில் நடிகர் விகிரமின் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தில் அறிமுகம் ஆகிறார்    நடிகர் விக்ரமுக்கு பாலாவின் சேது ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதாந்யாகியாக மேகா சௌத்ரி அற்முகமாகிறார்.   இவருடன் ஈஸ்வரி ராவ் மற்றும் பிக் பாஸ் புகழ் ரைசா ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ராஜு முருகன் வசனம் எழுதி உள்ளார்.   அர்ஜுன் ரெட்டி படத்துக்கு இசை அமைத்த ரதன் வர்மா இப்படட்திலும் இசை அமைக்கிறார்.   இப்படட்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி