சென்னை:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக புகழேந்தி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணி தொடர்பாக 59 பொறுப்பாளர்களை நியமித்து உள்ளது திமுக தலைமை.

தமிழகத்தில்  நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்.21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், விக்கிரவாண்டிய தொகுதியில், தேர்தல் பணிகளை கவனிக்க  திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தேர்தல்  பொறுப்பு குழு தலைவராக பொன்முடி, செயலாளராக ஜெகத்ரட்சகன் எம்பியும் நியமிக்கப்பட்டு உள்ளனர். விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக கே.என்.நேரு, காணை வடக்குக்கு எ.வ.வேலு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தெற்கு ஒன்றியத்துக்கு தா.மோ. அன்பரசன், எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்க பாண்டியன், கதிர் ஆனந்த் டி.எம்.செல்வகணபதி, ஏகேஎஸ் விஜயன், ரமேஷ், ராமலிங்கம், சண்முகம், செல்வம்,  கிருஷ்ணசாமி மற்றும் எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, பூண்டி கலைவாணன், மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின்குமார், சவுந்தர பாண்டியன், மதிவாணன், ஆடலரசன், டிஆர்பி ராஜா, ரகுபதி, துரை, சந்திரசேகரன், பெரியண்ணன் அரசு, மஸ்தான் எம்எல்ஏ உள்ளிட்ட 59 எம்எல்ஏக்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்.