விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது! டிடிவி தினகரன்

சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை  என்று ஏற்கனவே அறிவித்திருந்த  அமமுக துணைபொதுச் செயலாளர்  டிடிவி தினகரன் தற்போது எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே வேலூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுவதை தவிர்த்த நிலையில், தற்போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது யாருக்கும் ஆதரவு தராது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், அமமுக கட்சியை பதிவு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 17ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளதாகவும்,  விரைவில் கட்சியை பதிவு செய்துவிட்டு, தங்களது கட்சிக்கு தனிச் சின்னம் பெற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடுவோம் என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி