விக்கிரவாண்டி, நாங்குனேரி, காமராஜர் இடைத்தேர்தல்! 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

சென்னை:

மிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும்  விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்கும் இன்று காலை  7 மணிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

பல இடங்களில் மழை பெய்து வருவதால் வாக்காளர்கள் குடை பிடித்தபடியே வாக்குச்சாவடிக்கு வருகை தருகின்றனர்.  நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள கல்பட்டு மையத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார்.

காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில்12.84% வாக்குகள் பதிவு. நாங்குநேரி தொகுதியில் 18.41% வாக்குகள் பதிவபானது.  புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதியில் 9.66% வாக்குகள் பதிவு ஆகி உள்ளது.

இதற்கிடையில், புதுச்சேரி காமராஜ் நகர் தேர்தல் : என்.ஆர். காங். வேட்பாளர் புவனேஸ்வரன் சாலை மறியல் செய்து வருகிறார். அங்குள்ள சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் ஆளும் கட்சியினர் டோக்கன் விநியோகம் செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டார். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.

கார்ட்டூன் கேலரி