சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி மாநிலம்  காமராஜர் நகர்  ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ள சீமான், 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் ராதாமணி மரணம் அடைந்து விட்டதா லும், நாங்குனேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.  அதுபோல, புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனதால் அந்த தொகுதியும் தற்போது காலியாக  உள்ளது.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில், அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஆனால்,  இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிட உள்ள வேட்பாளர் களின் பெயர்களை அறிவித்துள்ளது.

அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் சமூக செயற்பாட்டாளரான கு கந்தசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் சா.ராஜநாராயணன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார்.

இதே போல் புதுச்சேரி மாநிலம்  காமராஜர் நகரில் பிரவினா மதியழகன் நாம் தமிழர் சார்பில் போட்டிடுகிறார். இவர் அக்குபஞ்சர் பட்டயப் படிப்பு  படித்துள்ளார்.