விக்கிரவாண்டி, நாங்குனேரி வெற்றி: விஜயகாந்துக்கு எடப்பாடி நன்றி

சென்னை:

டைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேர இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்ற நிலையில்,   தேர்தலின்போது பிரசாரம் செய்த விஜயகாந்த், பிரேமலதாவுக்கு அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.

அதிமுக துணைஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ததற்காக,  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார் என்று தேமுதிக தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் இடைத்தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட எனக்கும், பிரேமலதாவுக்கும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாகவும், அத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறி உள்ளார்.

மேலும்,  வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி