கள்ள தொடர்பு ஜோடியை இரவு முழுதும் அடித்து உதைத்த கிராமத்தினர்

துபுகி,  அசாம்

சாம் மாநிலத்தை சேர்ந்த துபுகி கிராமத்தில் கள்ள தொடர்பு வைத்திருந்த ஜோடியை கிராம மக்கள் இரவு முழுவதும் அடித்து உதைத்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் துபுகி.  இக்கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் அங்குள்ள மற்றொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது..   திருமணமான அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அவருடைய கணவர் இல்லாத போது இரவு நேரத்தில் இந்த இளைஞர் சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த இளைஞரும் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்களை கிராமத்தினர் கண்காணித்து வந்துள்ளனர்.    இதை அறியாத அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு இரவில் வந்த போது கிராமத்தினர் இருவரையும் பிடித்துள்ளனர்.    கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை கண்டிக்கும் வகையில் அந்த ஜோடியை இரவு முழுவதும் மாறி மாறி அடித்து உதைத்துள்ளனர்.

காலையில் காவல் துறையினர் விவரம் அறிந்து அங்கு சென்றுள்ளனர்.  அப்ப்போது அந்த இருவரும் ஆடைகள் கிழிந்து ரத்தம் சொட்ட கிடந்துள்ளனர்.  அவர் களை மீட்டு அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

இது குறித்து நாகோன் மாவட்ட காவல் அதிகாரி ரிபுல் தாஸ், “ இது குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் க்ள்வது இம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.  இது மிகவும் தவறான செய்கை ஆகும்” என தெரிவித்துள்ளார்.