பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின்2 படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதா சர்மா. சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அடிக்கடி டிவியில் காபி விளம்பரத்திலும் வந்து கவர்வார். படத்தில் இன்னும் அவரது வளர்ச்சி குறைவாக இருந்தாலும் தோற்றத்தில் நெடு நெடுன்னு வளர்ந்திருக்கும் அதா சர்மா, தற்போது வில்லன் நடிகர் மனதை கொள்ளையடித்திருக்கிறார்.


விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் விதுயூத் ஜாம் வால். அஜீத் நடித்த பில்லா2, சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். இவருக்குத்தான் அதா சர்மா மீது காதல் பிறந்திருக்கிறது.
இவர் ஒரு பேட்டியில் அதா சர்மா பற்றி கூறும்போது,’ அவர் தோழி மட்டு மல்ல. நாங்கள் ஒருவருக் கொருவர் அன்பானவர்கள், அக்கறை கொண்ட வர்கள். அதா சர்மாபோன்ற ஒருவரை விரும்புகிறேன்” எனக் கூறினார். தற்போது வித்யூ அளித்துள்ள மற்றொரு பேட்டியில், ’நான் இப்போது காதலில் விழுந்திருக்கிறேன். இப்போதுதான் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித் துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுபற்றி அதா சர்மா பதில் எதுவும் சொல்லவில்லை. தோழியாக இருக்கும் காதலியாக அதிக இடை வெளி இருக்காது என்று ரசிகர்கள் வருங்கால காதல் ஜோடிக்கு வாழ்த் துக்கள் தெரிவித்து வருகின்றனர்.