விழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை!

விழுப்புரம்:

விழுப்புரத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல ரவுடி இன்று மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், குயிலாப்பாளையத்தில் மணிகண்டன் தலைமையிலான ரவுடி கும்பலும், பூபாலன் தலைமையிலான ரவுடி கும்பலும் மிகவும் பிரபலம். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் நடக்கும். வெட்டு, குத்து,கொலை சஜகம்.

மணிகண்டன் கும்பலைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தனன். இவர் தன்மீதான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக  விழுப்புரம் நீதிமன்றத்திற்கு 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.img-20161004-wa0034

அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து நாட்டு வெடிகுண்டை வீசியது. . சூழலை புரிந்துகொண்ட ஜனா, பைக்கை போட்டுவிட்டு ஓடத்துவங்கினார். அவரை விரட்டிச்சென்ற கும்பல், சரமாரியாக வெட்டி கூறுபோட்டது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே ஜனா பலியானார்.

எதிர்த்தரப்பு ரவுடிக்கும்பலான பூலான் கோஷ்டிதான் இந்த கொலையை செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட ரவுடி குணா மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஜனா, பிறகு பா.ஜ.க.வுக்கு வந்தார். இங்கு அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

 

கார்ட்டூன் கேலரி