மாணவியை எரித்துக்கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்ல வேண்டும்… பிரேமலதா ஆவேசம்…

--
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே 10ம் வகுப்பு மாணவியை முன்விரோதம் காரணமாக எரித்துக்கொலை செய்தவர்களை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேம லதா ஆவேசமாக கூறி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில்  முன்விரோதம் காரணமாக 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டனர். இந்தவிவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், எரித்துக்கொள்ளப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்,  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.
பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்  என்று வலியுறுத்தியவர்,  எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு தேமுதிக சார்பில்  1 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
முன்னதாக எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

You may have missed