விழுப்புரம் – காட்பாடி பாசஞ்சர் ரெயில்: சோதனை ஓட்டம் நாளை தொடக்கம்!

விழுப்புரம்,

விழுப்புரம் முதல் காட்பாடி வரை செல்லும் புதிய மின்சார ரெயிலை தென்னக ரெயில்வே இயக்க உள்ளது. இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெறுகிறது.

புதிய மின்சார ரயில் ( பாசஞ்சர்) நாளை (18.3.17) முதல் (31.3.17) வரை விழுப்புரம் – காட்பாடி பாதையில் பரிசோதனையாக இயக்கப்படுகிறது….

பொது மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்து நிரந்தரமாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விழுப்புரத்தில் காலை 7.15க்கு கிளம்பி காட்பாடிக்கு 10.30 க்கு காட்பாடி சென்றடைந்து, பின்னர் முற்பகல் 11.30 க்கு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3.15க்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த மின்சார ரெயில் விழுப்புரம், திருவண்ணாமலை,போளுர் ,திருக்கோயிலூர்,ஆரணி ரோடு வழியாக காட்பாடியை சென்றடையும்.

நாளை முதல் 31ந்தேதி வரை இயக்கப்படும் இந்த ரெயிலை பொதுமக்கள் பொதுமக்கள் பயன்படுத்துவதை தொடர்ந்தே இந்த ரெயில் தொடர்ந்து இயக்கப்படுமா அல்லது முடக்கப்படுமா என்பது தெரிய வரும்.

இந்த அரிய வாப்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டால்… தற்போது சோதனை ஓட்டம் ஒடும் ரெயில் பின்னர் நிரந்தர ரெயிலாக மாற்றப்பட்டு விடும்.

 

Leave a Reply

Your email address will not be published.