விழுப்புரம் -செகந்திரபாத், தாம்பரம் – நெல்லை: ஸ்பெஷல் ரயில் அறிவித்துள்ளது தென்னக ரயில்வே

சென்னை:

யணிகளின் தேவையைக்கருதி, விழுப்புரம் டூ செகந்திரபாத், செகந்திரபாத் – விழுப்புரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து நெல்லை, நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் ஸ்பெஷல் பயணிகள் ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி, ஜூலை 31ந்தேதி முதல் இந்த ரயில்சேவைகளை தொடங்குவதாகவும், இதற்கான முன்பதிவு செய்யும் பணி  தொடங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 31ந்தேதி  முதல் செப்டம்பர் மாதம் 26ந்தேதி வரை (9 சேவை) தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் எண் 06044 விழுப்புரத்தில் இருந்து வரும் 31ந்தேதி புறப்பட்டு, ஆகஸ்டு 1ந்தேதி செகந்திர பாத்தை சென்றடையும் என்றும், செகந்திரபாத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 2 மணி அளவில் விழுப்புரம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயிலானது, விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, செங்கல்பட்டு, தாம்பரம், எக்மோர், சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடுர், நெல்லூர், ஆங்கோலே, சிரளா, தெனாளி, குண்டூர், பிடுகுரல்ல, மிர்யால்குடா, நளகொண்டா வழியாக செகந்திரபாத்தை சென்றடைகிறது.

அதுபோல, தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஆகஸ்டு 9ந்தேதி முதல் ஆகஸ்டு 30ந்தேதி வரை இயக்கப்படுகிறது.

மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயிலானது அடுத்த நாள் காலை 10 மணிக்கு நெல்லையை சென்றடையும் என்றும், இந்த ரயிலானது, செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மாமாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், பம்பாகோவில் சன்டி, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி சேரன்மகாதேவி வழியாக நெல்லை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி