‘குலசாமி’ படத்திற்காக இணையும் விமல் – விஜய் சேதுபதி கூட்டணி….!

மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ படத்தை தொடர்ந்து விமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுவரை விஜய் சேதுபதி நடிக்காத கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு ‘குலசாமி’ என்று பெயரிட்டுள்ளனர்.

விமல் , விஜய் சேதுபதி இருவருமே கூத்து பட்டறையில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.