டில்லி

ந்தியாவை பிளவு படுத்தும் இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்னும் பாஜக தலைவரின் பேச்சு கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

இஸ்லாமியப் பிரமுகர்களில் ஒருவரும், எ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதீன் ஓவைசி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர்.  அவர் பாராளுமன்றத்தில், “இந்தியாவில் வசித்து வரும் இஸ்லாமியர்களை பாகிஸ்தானி எனக் குறிப்பிடுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்”  என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கட்யார் பதில் அளித்துள்ளார்.   அவர் ஒரு பேட்டியில், “மதத்தின் பெயரால் இஸ்லாமியர்கள் இந்த நாட்டை பிளவு படுத்தி உள்ளனர்.   அவர்கள் எதற்கு இந்த நாட்டில் வசிக்க வேண்டும்.   நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.   அவர்கள் பாகிஸ்தான் அல்லது வங்க தேசத்துக்கு செல்லட்டும்.  இங்கு அவர்களுக்கு வேலை இல்லை.

நமது நாட்டின் தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்பவர்களையும்,  வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்தாதவர்களையும் தண்டிக்கும் விதமாக பாராளுமன்றம் ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும்.   அத்துடன் அந்த சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் கொடியை இங்கு ஏற்றுபவர்களுக்கும் தண்டனை கிடைக்க வழி வகுக்க வேண்டும்”  எனக் கூறி உள்ளார்.

பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கட்யாரின் பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.