சென்னை :

ட்சியின் அடிப்படை விதியை யார் மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது என்றும்,  கட்சி விதிகளை மீறி செயல்பட்டால், கட்சியிலிருந்து நீக்காமல், என்ன மாலையா போடுவார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்க்கும் வகையில் தமிழக எம்.பி.க்கள் பாராளு மன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத, மோடி அரசை கண்டித்தும் ஆந்திரமாநில எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,  மத்திய அரசுக்கு எதிராக  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கொண்டு வரும் மோடி அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிமுக ஆதரவளிக்கும், அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் செய்தி தொடர்பாளருமான  கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி, கே.சி.பழனிசாமியை கட்சி பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தன்னை நீக்கியது குறித்து  கருத்து தெரிவித்த கே.சி.பழனிசாமி, எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் தன்னை நீக்க பழனிசாமிக்கோ பன்னீர்செல்வத்துகோ அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும் அதிமுகவின் புதிய பதவி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், தன்னை நீக்கியது செல்லாது என்றும்,   பாஜகவிற்கு எதிராக பேசினால், கட்சியிலிருந்து நீக்குவார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,  , கட்சியின் கொள்கை முடிவுகள் தொடர்பாக யாரும் தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க முடியாது.  கட்சி விதிகளை மீறி செயல்பட்டால், கட்சியிலிருந்து நீக்காமல், என்ன மாலையா போடுவார்கள்? கே.சி.பழனிசாமி நீக்கத்தின் பின்னணியில் யாரும் இல்லை என ஜெயக்குமார் விளக்கமளித்தார்

கே.சி. பழனிசாமி விவகாரத்தில் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக் கூடாது என்றவரிடம் ராகுலின் தமிழ் குறித்த பேச்சுக்கு,   உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழ் மொழியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

உலகம் இருக்கும் வரைக்கும் தமிழ்மொழி தழைத்தோங்கும் என்றும், அதனை யாரும் அழிக்க முடியும் என்பது நடக்காத காரியம் எனவும் தெரிவித்துள்ளார்.