ராஜ்யசபாவில் ராகுல்காந்தி மீது பாஜ உரிமை மீறல் தீர்மானம்

டில்லி:

கில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது பாஜ உரிமை மீறல் புகார் கூறி உள்ளது.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெயரை  மாற்றி டுவிட்டரில் பதிவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது பா.ஜ. எம்.பி., பூபேந்ததிர யாதவ் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

அந்த தீர்மானத்தில், காங்கிரஸ் தலைவர் வேண்டுமென்றே, தவறாக, நிதி அமைச்சரவை அவமதிக்கும் வகையில் ஜெட்லி பெயரை மாற்றியுள்ளார். இது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர தகுதி பெற்றது எனக்கூறி உள்ளார்.

இதுகுறித்து பேசிய ராஜ்யசபா அவைத்தலைவரான வெங்கையாநாயுடு, ராகுல்காந்தி மீது பூபேந்திர யாதவ் கொண்டு வந்த உரிமை மீறல் தீர்மானம்  ஆய்வில் உள்ளது. இந்த தீர்மானத்தை முழுதும் படித்து பார்த்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

நடந்து முடிந்த குஜராத் தேர்தலின்போது, பிரதமர் மோடி,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி குறித்து  விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக பாராளுமன்றம் முடக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த பிரச்சினையை முடிக்கு கொண்டு வரும் வகையில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பேசும்போது, மன்மோகன் சிங் நாட்டுப்பற்று குறித்து மோடி கேள்வி எழுப்பவில்லை எனவும், அவரை உயர்ந்த இடத்தில் நாங்கள் வைத்திருப்பதாகவும் கூறினார்.

அருண்ஜேட்லியின் பேச்சு குறித்து டுவிட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  பிரதமர் மோடி என்ன பேச வேண்டும் என நினைத்தாரோ அதனை பேசவில்லை. எதைப்பேசினாரோ அதைத்தான் பேச வேண்டு மென்று அவர் நினைக்கவில்லை என தெளிவுபடுத்திய ஜெட்லிக்கு நன்றி எனக்கூறியிருந்தார்.

அதில் ஜெட்லியின் பெயரை Arun Jaitley என்பதற்கு பதில் Jaitlie எனக்குறிப்பிட்டிருந்தார்.