கொழும்பு:

லங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற தொடர்  குண்டுவெடிப்பை தொடர்ந்து, அங்கு சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

நேற்று மாலை திடீரென சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே திடீர் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் 257 பேர் உயிரிழந்த நிலையில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடூர குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது தொடர்பான விசாரணையில், இலங்கையை சேர்ந்த தவ்ஹீத் ஜமாத் என்ற  இஸ்லாமிய அமைப்பு ஐஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டது தெரிய வந்த நிலையில், இலங்கையில்  தவ்ஹீத் ஜமாத் உள்பட சில அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவ்வப்போது இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேவாலய குண்டுவெடிப்பு நடந்த நேகம்போ, நீர்க்கொழும்பு, பலகத்துறை பகுதிகளில் சிங்களர்கள், முஸ்லிம்கள் இடையே நேற்று மாலை மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு   மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டது.

இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.