இலங்கையில் இரு பிரிவினரிடையே மீண்டும் வன்முறை: ஊரடங்கு உத்தரவு

கொழும்பு:

லங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சிங்களர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடற்ரை பகுதியான சிலாபம் நகரில் கலவரம் வெடித்ததால் 24 மணி நேரத்துக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த  ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில்  தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு இலங்கையில் தவ்ஹீத் ஜமாத் உதவி புரிந்து தெரிய வந்தது. இதையடுத்து,  ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களும், தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களும் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் சிங்களர்கள் மட்டும் புத்தபிட்சுகள் இஸ்லாமியர்கள் மீது கடும் கோபத்துடன் அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் வட மேற்கே புத்தளம் மாவட்டம் சிலாபத்தில் இன்று இரு தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப் பட்டனர். அதைத்தொடர்ந்து, அங்கு  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்திற்கு காரணம்,  தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறப்போவதாக முகநூலில் தகவல்கள்  பரவியதையடுத்து அதன் உண்மைத் தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதேநேரத்தில் ஒரு தரப்பினர் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய நிலையில், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஆர்ப்பாட்டக்காரரைக் கலைத்ததுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேஷ அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது.