1mod%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bfடில்லி:
காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும்  வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும்,  கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரியில் இருந்து  தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை ஆரம்பத்திலேயே அடக்காமல் கர்நாடக அரசு வேடிகை பார்த்து வந்தது.
இதையடுத்து கர்நாடகாவில் நேற்று பயங்கர வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 60 பஸ்கள், 50 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தமிழர்களின் கடைகள், ஓட்டல்கள் சூறையாடப்பட்டன. தமிழர்களையும் ஆங்காங்கா தாக்கிய சம்பவங்களும் நடைபெற்றது.
இதையடுத்து பெங்களூர், மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படையினர் கண்காணித்து வருகின்றனர். கர்நாடக அரசு செயலிழந்து உள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார். துகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் நடந்து கொள்வதைப் பார்த்து நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பிரச்சினைகளுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. ஜனநாயக நாட்டில், பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும். இரு மாநிலங்களிலும் உள்ள சூழ்நிலை மற்றும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. நாட்டின் நலனே முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். பொறுப்புகளை மனதில் வைத்து இரு மாநிலங்களும் செயல்பட வேண்டும்.
இந்த வன்முறை காரணமாக ஏழை மக்கள் மற்றும் தேசத்தின் சொத்துகள் வீணாகின்றன. இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். வன்முறையால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. இந்த பிரச்சினைக்கு சட்ட வரம்பிற்குட்பட்டே தீர்வு காணப்பட வேண்டும். சட்டத்தை மீறுவது சரியான வழியல்ல“
.இவ்வாறு இரு மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.