தொடரும் கொடுமை: காதலிக்கச் சொல்லி தாக்குதல்! பள்ளி மாணவி தற்கொலை முயற்சி!

கரூர்:

ரூர் அருகே தரகம்பட்டியில்  தன்னை காதலிக்க மறுத்த பிளஸ் 2 மாணவியை அடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் தரம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். மாணவி மறுத்திருக்கிறார்.

Love-hurts-text-with-blood-hate-lovers-image

இந்த நிலையில், தன்னை காதலித்தே ஆக வேண்டும் என்று மாணியை பல முறை மிரட்டியிருக்கிறார் சுரேஷ்குமார். ஆனால் மாணவி விலகிச் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று அந்த மாணவியை சுரேஷ்குமார் தாக்கியிருக்கிறார்.  இதையடுத்து அந்த மாணவி விரக்தியில் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சுரேஷ்குமார்  கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி