நாகாலாந்தில் வெடித்தது வன்முறை! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தால் பதற்றம்!!

--


கொகிமா

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக நாகலாந்து மாநிலத்தில் இன்று வன்முறை வெடித்தது. தலைநகர் கொகிமா முழுவதும் வன்முறை பரவிஉள்ளது. முதல்வர் ஜீலியாங் மற்றும் அமைச்சர்கள் இருந்த சட்டசபையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். அரசு அலுவலகங்கள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், புதிய தலைமைச் செயலகம் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த, ஜனவரி 31ம் தேதி, போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இருவர் உயிரிழந்தனர், 10 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மாநிலத்தின் வர்த்தக தலைநகர் திமாபூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மாநிலம் முழுவதும் அலைபேசி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.