டெல்லி வன்முறைக்கு 7 பேர் பலி…. 35 கம்பெனி துணை ராணுவம் குவிப்பு …

டெல்லி :

 

டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை ஒரு போலீசார் உள்ளிட்ட 7 பேர் பலி.

வடகிழக்கு டெல்லியில் மௌஜ்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் கபீர் நகர், ப்ரஹ்மபுரி உள்ளிட்ட சில இடங்களில் இன்று காலை கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்ததாக ப்ரஹ்மபுரி பகுதியில் போலீசார் கொடியணிவகுப்பு நடத்தினார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு டெல்லியின் – ஜஃப்ராபாத், சந்த் பாக், மௌஜ்பூர், பஜான்புரா, கர்தாம்புரி, கோகுல்பூரி, கஜூரி மற்றும் கரவால் நகர் ஆகியவை பகுதிகளில், பல இடங்களில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில். வன்முறையை கட்டுப்படுத்த 35 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி முதல்வர் மற்றும் டெல்லி காவல் துறை தலைவர் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வன்முறையை கைவிடும்படி வேண்டுகோள்விடுத்தார். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து டெல்லிக்குள் ஊடுருவாமல் இருக்க டெல்லி மாநில எல்லையை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.