தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் இன்று 100 நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதை போலீசார் தடுத்தபோது வன்முறை வெடித்து. இதன் காரணமாக ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க போலீசார், தடியடி, துப்பாக்கி சூடு  நடத்தினர். இதில்  போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து மத்திய – மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 நாட்களாக போராட்டம்  தொடர்ந்து வரும் நிலையில், இன்றைய போராட்டம் தீவிரமானது.

கலவரம் வீடியோ… 

மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடியில இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்  தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி சென்றனர். இந்த போராட்டத் தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர்களை மீறி போராட்டக்கார்கள் பேரணி செல்ல முயன்றனர்.

அப்போது போராட்டத்தை மறிந்த காவல்துறை வாகனத்தை கவிழ்த்துவிட்டு போராட்டக்காரர்கள் முன்னேறினர்.  போராட்டக்காரர்களை  கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும்  இருசக்கர வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  அப்பகுதி போர்க்களமாக காட்சி அளிக்கிறது.

போலீசாரின் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு  காரணமாக பலர் காயம் அடைந்துள்ளதாகவும் காயம் அடைந்த வர்கள் உடடினயாக  மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கீதா ஜீவன்:

இன்றைய மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ண திமுக எம்எல்ஏ கீதா ஜீவன்  கூறும்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.

கவுதமன்:

தூத்துக்குடியில் உருவான இந்த தன்னெழுச்சி போராட்டம் இன்னொரு மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியாக தமிழகம் முழுவதும் வெடிப்பதற்குள் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.

புற்றுநோய், சிறுநீரகம் செயலிழப்பு, மூச்சுத்திணறல் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை தொற்றுவித்து வரும்   ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும் என்றும்,  ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.