“கலவரம் வாழ்க்கையின் ஓர் அங்கம்’’ அரியானா அமைச்சரின் சர்ச்சை கருத்து..

குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டம் , கலவரமாக உருவெடுத்து 35 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லிக்கு வந்துள்ள அரியானா அமைச்சர் ரஞ்சித் சிங் சவுதாலாவிடம் கலவரம் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர்,’’ டெல்லியில் இதற்கும் முன்பும் கலவரம் நடந்துள்ளது.இப்போதும் நடக்கிறது. கலவரம் நமது வாழ்க்கையின் ஓர் அங்கம்’’ என்று அமைதியாக சொல்லி விட்டு நகர்ந்தார்.

அமைச்சர் சவுதாலா சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பவர். கொஞ்ச நாட்களுக்கு முன்பு, அரியானாவில் பேட்டி அளித்த அவர், மின்சார கட்டணத்தை கட்டாத பெற்றோர்களின் பிள்ளைகளை அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டோம்’’ என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.