புதுதில்லி:
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், வன்முறையாளர்கள் பொதுச்சொத்துக்ளை எரித்த்தற்கு கடும் கண்டனத்தையும்  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
supreme
காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுவது  தொடர்பாக கடந்த 5-ஆம் தேதி உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவவில் போராட்டம் நடைபெற்று வந்தது. போராட்டத்தின் உச்சக்கட்டமாக தமிழர்கள் மீது தாக்குதல், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து,  போராட்டத்தை தடுக்க கோரி,  மக்கள் கூட்டமைப்பு கட்சியின் பொதுச் செயலாளர் பி.சிவகுமார் சார்பில் அவரது வழக்குரைஞர் என்.ராஜாராமன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில்,
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்காமல் வன்முறையில் இறங்கியது சட்டவிரோதம் என கர்நாடகாவை சாடியது.
மேலும் பொது சொத்துக்களை தீவைத்து எரித்தது கண்டனத்துக்குரியது என்றும் கூறியது. 
போராட்டத்தில் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது.
வன்முறையில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் இருமாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
போராட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது 
பொதுச்சொத்துக்களை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தது கண்டனத்துக்கு உரியது என்று கருத்து தெரிவித்துள்ளது.