கொல்கத்தா: பாரதீய ஜனதா கட்சியினர், கொல்கத்தா நகரிலுள்ள ஈஸ்வரசந்திர வித்யாசாகர் கல்லூரிக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதோடு, அக்கல்லூரி வளாகத்தில் இருந்த அத்தலைவரின் மார்பளவு சிலையையும் உடைத்து நொறுக்கியுள்ளனர்.

அந்த மார்பளவு சிலை அக்கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலை உடைக்கப்பட்டதோடு மட்டுமின்றி, பெண்களின் துப்பட்டாக்கள் இழுக்கப்பட்டதோடு, முக்கியமான ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்ட லேப்டாப்பும் நொறுக்கப்பட்டது. அந்த லேப்டாப் விலங்கியல் பேராசிரியர் தெபாசிஷ் கர்மாக்கர் என்பவருடையது.

ஈஸ்வரசந்திர வித்யாசாகர் சிலை, கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்தப் பேழையை உடைத்து சிலையை நொறுக்கியுள்ளனர்.

மேலும், மின்சார வயர்களை வன்முறையாளர்கள் அறுத்துவிட்டதால், அந்த சம்பவத்தின்போது எங்கும் இருட்டு நிலவியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.