பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

டில்லி:

பாகிஸ்தானின் போன் விமானத்தை சுட்டு  வீழ்த்தி கிலி ஏற்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.  நாளை நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சியின்போது அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அரசு சார்பில் வீர் சக்ரா வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்த தமிழக வீரர் அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது.

இந்த விருது சுதந்திர தினமான நாளை அவருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Balakot attack, Vir Chakra Award, Wing commander Abhinandan
-=-