இணையத்தில் வைரலாகும் தாய் மாமன் தனுஷின் புகைப்படம்….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ்.

தனுஷ் எப்போதுமே குடும்பத்துடன் மிகவும் பாசமாகவும், நெருக்கமாகவும் இருப்பவர்.

அதிலும் சகோதரிகள் என்றால் அலாதி பாசம் அவருக்கு . படப்பிடிப்புகள் இல்லாத சமயங்களில் வீட்டில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் .

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தனுஷின் சகோதரியின் மகளுக்கு மொட்டை அடிக்க திருப்பதி சென்றுள்ளனர்.

தனுஷின் குடும்ப வழக்கப்படி, தனுஷ் தான் முதல் முடியை எடுத்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.