சமோசாவை திருடிய இங்கிலாந்து இளவரசர் – வைரலாகும் வீடியோ

இங்கிலாந்து இளவரசர் ஹார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது யாருக்கும் தெரியாமல் சமோசாவை மறைமுகமாக எடுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

samosa

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெக்கன் மார்கலை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு, இங்கிலாந்தின் பிரபலமான ஜோடியாக மாறியுள்ள ஹாரியும், மெக்கனும் சமூக வலைதளங்களிலும், செய்திகளிலும் தவறாமல் இடப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஹாரி சமீபத்தில் தொண்டு நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தனது மனைவி மெக்கனுடன் கலந்துக் கொண்டார். ஹாரி நிகழ்ச்சியின் முடிவில் அங்கு வைத்திருந்த சமோசாவை யாருக்கும் தெரியாமல் எடுத்து, பேப்பரில் சுற்றி மறைத்தப்படி நடந்து சென்று காரில் ஏறினார். இளவரசர் ஹாரி திண்பண்டத்தை திருடிய வீடியோ ஒருவரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ நெட்டிசன்களால் அதிகளவில் வைரலாகி வருகிறது.