பெண்கள் விசத்தில்  நானும், டிரம்ப்பும்!: விஜய் மல்லையாவின் சுவார்ஸ்ய வீடியோ

பிரபல மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையா 23 வருடங்களுக்கு முன்னால்,  1994ஆம் ஆண்டு அளித்த ஒரு சுவாரசிய பேட்டி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

குதிரை பந்தய  மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளள அந்த பேட்டியில், “எனக்கு குதிரைகள் என்றால் மிகவும் பிடிக்கும்,  நிறைய குதிரைகளை வளர்க்கிறேன்” என்கிறார்.

பேட்டி எடுக்கும் பெண் நிருபர் அவரிடம், “குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்களை டொனால்டு டிரம்புடன் ஒப்பிடுகிறார்களே அதை எப்படி பார்க்கிறீர்கள்” என்று கேட்கிறார்.

அதற்கு விஜய் மல்லையா, “எனக்கு டிரம்புடன் பரிட்சயம் கிடையாது. அவருடன் ஒப்பிட்டால் நான் ஓட்டாண்டி” என்கிறார்.

அடுத்து அந்த செய்தியாளர், “உங்களுக்கும் டொனால்டு டிரம்ப் போல பெண்கள் மீது ஈர்ப்பு அதிகம் என கூறுகிறார்களே” என்று கேட்க… விஜய் மல்லையா, “அப்படியெல்லாம் இல்லை நான் பெண்களின் அழகை ரசிப்பவன், ஆனால் ஒழுக்கமானவன்” என்கிறார்.

பெங்களூரில் பெண்கள் உடன் உங்களுக்கு தொடர்பாமே என்ற கேள்விக்கு, என் மனைவி ரேகா தான் பெங்களூரில் உள்ளார் என்று தேர்ந்த அரசியல் தலைவர் போல்  பதிலளித்துள்ளார். விஜய் மல்லையா.

 

அந்த வீடியோ:

https://www.youtube.com/watch?v=F69JhEVAwvc&feature=youtu.be