சர்ச்சையில் சிக்கிய போனி கபூர் – வைரலாகும் வீடியோ

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். ஸ்ரீதேவி மறைவின் போது, போனி கபூர் மீது ஒரு சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதை எல்லாம் கடந்து வந்த போனி கபூர் அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், போனி கபூர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துக் கொண்ட போனி கப்பூர், பிரபல நடிகை ஊர்வசியை தகாத முறையில் தொட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவால் போனி கப்பூருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நடிகை ஊர்வசி, இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், போனி கபூர் ஜெண்டில்மேன், அவரை ட்ரோல் செய்யாதீர்கள், அவரை நான் ஆதரிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.