ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 40வது சத்தை அடித்ததுடன், கேப்டனாக விரைவில் 9,000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

virat

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீரர்களாக வந்த ரோஹித் டக் அவுட்டாகவே ஷிகர் தவானுடன் கோப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். அடுத்து சொற்ப ரன்களில் இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க இறுதி வரை நின்று விளையாடிய விராட் கோலில் 43வது ஓவரில் தனது 40வது சதம் அடித்து நிறைவு செய்தார். இதன் மூலம் இந்திய அணி 250 ரன்கள் கடந்தது. அதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் விராட் கோலி அடித்த 40அது சதம் மூலம், கேப்டனாக விரைவில் 9,000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். சச்சின் தனது 355வது ஒருநாள் போட்டியில் 40வது சதம் அடித்தார். ஆனால் அவரை 139 இன்னிங்ஸ் குறைவாக விளையாடிய விராட் கோலி 40 சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அதே நேரத்தில் ரோஹித் சர்மா 22 சதங்கள் அடித்து கோலியை நெருங்க முடியாத தூரத்தில் உள்ளார். சர்வதேச அதிரடி வீரர்களான சங்ககாரா, ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் ஓய்வு பெற்று விட்டதால் தற்போது விளையாடி வரும் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.