சர்வதேச கிரிக்கெட்டில் 22000 ரன்கள் என்ற சாதனையை எட்டிய விராத் கோலி!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், அரைசதம் அடித்த விராத் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்கள் என்ற சாதனையை எட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 89 ரன்களை அடித்து அவுட்டானார் கோலி. இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 22,011 ரன்களைக் கடந்தார்.

இவர், மொத்தம் 250 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 11,977 ரன்களையும், 86 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7240 ரன்களையும், 82 சர்வதேச டி-20 போட்டிகளில் ஆடி 2794 ரன்களையும் அடித்துள்ளார்.

இந்த வரிசையில் இணையும் எட்டாவது வீரராகிறார் விராத் கோலி. இவருக்கு முன்னர், டெண்டுல்கர்(34,357 ரன்கள்), இலங்கியின் சங்ககரா(28,016 ரன்கள்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங்(27,483 ரன்கள்), இலங்கையின் ஜெயவர்தனே(25,957 ரன்கள்), தென்னாப்பிரிக்காவின் காலிஸ்(25,534) ரன்கள், ராகுல் டிராவிட்(24,208 ரன்கள்) அடித்துள்ளனர்.