ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததை தொடர்ந்து இந்தியா தொடரை வென்றது.

india

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி முதல் முறையாக அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வென்று ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மெல்போர்னில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்தது. இதையடுத்து 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

india

முதல் இன்னிங்சில் புஜாரா 193ரன்கள், பண்ட் 159 ரன்கள் எடுத்து அசத்தினர். அவர்களை தொடர்ந்து ஜடேஜா 81ரன்களும், அகர்வால் 77 ரன்களும் எடுத்தனர். இறுதியாக முதல் இன்னிங்சில் ந்தியா 7விக்கெ இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்தமண்ணில் ஆஸ்திரேலியா பாலோ ஆன் ஆனது. இதில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கவாஜா 4, ஹாரிஸ் 2 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. 5வது நாளான இன்றைய ஆட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்ததால் 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

cheteshwar

இதன் காரணமாக டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்ற இந்திய அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்தது.

இந்த தொடரில் 31 மணி 8 நிமிடங்களில் 1258 பந்துக்களில் 521 ரன்கள் குவித்த சத்தீஸ்கர் புஜாரா இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாகவும், டெஸ்ட் தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து தொடரை வென்ற வீராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.