பொதுவெளியில் கண்டிப்பு: வீராட் கோலி – அனுஷ்கா ஷர்மாவிற்கு நோட்டீஸ்

தன்னை அவமானப்படுத்தியதாக வீராட்கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவிற்கு அர்ஹன் சிங் என்பவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது அர்ஹன்சிங் என்பவர் தனது காரில் இருந்து குப்பையை வெளியே எறிந்துள்ளார். அதனை பார்த்த அஷ்கா ஷர்மா தனது காரை நிறுத்தி அவர்களை கண்டித்தார். குப்பைகளை குப்பை தொட்டியில் போடுமாறு அறிவுறுத்தினார்.
anuska
அர்ஹன் சிங் குப்பை எறிந்ததற்காக அனுஷ்கா ஷர்மா கண்டித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த கோலி, “ ஆடம்பர காரில் செல்பவர்கள் மூளையை பறிக்கொடுத்து விட்டார்கள். இந்த மக்களா நமது நாட்டை காப்பாற்ற போகிறார்கள். இது போன்ற நபர்களை கண்டால் அவர்களுக்கு இது போல் அறிவுரை வழங்குகள், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று பதிவிட்டுருந்தார்.

இதனை தொடர்ந்து சமூக வளைதளங்களில் தன்னை விமர்சித்து வீடியோ பதிவிட்டதால் அவமானம் ஏற்பட்டதாக கூறி அர்ஹன் சிங் தனது வழக்கறிஞர் மூலம் வீராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து அர்ஹன் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில் தற்போது சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்டு இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அவர்கள் பதிலுக்காக காத்திருப்பதாக் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

சமூகவளைதளங்களில் வீடியோ பதிவிட்டதன் காரணமாக அர்ஹன் சிங்கிற்கு பொதுமக்களிடம் இருந்து கண்டனங்கள் வருவதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து சட்ட ஆலோசனை நடத்தப்படுவதாக அனுஷ்கா சர்மாவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு வீராட் கோலி பதிவிட்ட வீடியோவிற்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள அர்ஹன் சிங் “ என்னுடைய தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அனுஷ்கா ஷர்மா பொறுமையாக கூறியிருக்கலாம். இதனால் அவருக்கு ஒன்றும் குறைந்து விடாது. உங்கள் வாயில் இருந்து வெளியே வந்த வார்த்தைகளை விட எனது ஆடம்பர காரில் இருந்து வெளியே எறியப்பட்ட குப்பைகள் குறைவாகவே இருந்தன. பிறகு எதை எதிர்ப்பார்த்து வீராட் கோலி இந்த வீடியோவை ஆன்லைனில் பதிவிட்டார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வீராட் மற்றும் அனுஷ்கா சர்மாவின் செயல் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் ஜா ” பிரபலங்கள் ஒரு நல்ல செயலை செய்யும்போது அதனை வெளிப்படுத்த தேவையில்லை. இன்னும் எவ்வளவு விளம்பரங்கள் உங்களுக்கு தேவை” என்று கேட்டுள்ளார்.