டில்லி:

ரன்ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா “யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்” என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு  பிசிசிஐ தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து அணி தலைவர் விராட் கோலி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது, அது  அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று  தெரிவித்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான  ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சியில் பிரபல இயக்குனர்  கரன்ஜோஹர் நடத்தி வரும்  காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு பேசியபோது, பெண்கள் குறித்து பேசிய வார்த்தைகள்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் கேட்டுள்ளது. தனது செயலுக்கு ஹர்திக் பாண்ட்யா மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, உலகக் கோப்பைக்கு தயார் ஆவதே  இந்திய அணியினரின்  கவனம் என்று கூறினார்.

அப்போது செய்தியளார்கள் அவரிடம்,  லோகேஷ் ராகுல், ஹர்த்திக் பாண்டியா சர்ச்சை கருத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கோலி, அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம் என்றவர்,  கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும்  கூறினார்.

தற்போதைய நிலையில் அணியில் எந்தவித மாற்றமும் செய்யும் முடிவு கிடையாது என்றவர்,  பிசிசிஐ எடுக்கும் முடிவை பொறுப்பே சிந்திக்க வேண்டும் என்றுளும் என்றார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.