டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் விராட் கோஹ்லி

ண்டன்

நேற்று வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அணிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தர வரிசையில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சர்வ தேச கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மென்களின் தரவரிசையில் இந்திய அனியின் கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இவர் 935 புள்ளிகள் எடுத்துள்ளார்.

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் 812 புள்ளிகள் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளார். அதை தொடர்ந்து அஸ்வின் 8 ஆம் இடத்திலும் முகமது ஷமி 22 ஆம் இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் ஆல் ரவுண்டர்கள் தர வரிசையில் இதிய வீரர் ரவீந்திர ஜடேஜா 2 ஆம் இடத்திலும், அஸ்வின் 5 ஆம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி