விராத்கோலி விளையாடுவார்: பிசிசிஐ

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி 10-வது ஐபில் தொடரில் சில போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் பெங்களூருவில் 14 ம் தேதி நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அவர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளதாக மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராத் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் ஐபிஎல் தொடரில் நடந்த மூன்று ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அவர் காயத்தில் இருந்து முழுவதுமாகக் குணமடைந்து விட்டதாக, மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து நாளை நடக்கும் மும்பையுடனான போட்டியில் கோலி ஆக்ரோஷமாகக் களமிறங்குகிறார். இதன் காரணமாக அவரது பெங்களூர் அணி தெம்பாக உள்ளது.

You may have missed