அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலில் 2ம் இடம்பிடித்தார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரே ஆண்டின் தனது வருவாயை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார்.

kholi

பிரபல போர்பஸ் என்ற பத்திரிகை ஆண்டுதோறும் இந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலை கணக்கெடுத்து வெளியிடுகிறது. அதன்படி 2018ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய 100 பிரபலங்களின் பட்டியலை போர்பஸ் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தி நடிகர் சல்மான் கான் ரூ.253 கோடி வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ. 228.09 கோடி வருவாய் ஈட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அவரின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.100 கோடி என்று இந்த நிலையில் ஒரே ஆண்டின் தனது வருவாயை விராட் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.

அனைத்து கிரிக்கெட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருவதாலும், விளம்பரங்களில் நடித்து வருவதாலும் அவரது வருமான உயர்ந்துள்ளாதாக கூறப்படுகிறது. இதேபோன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரூ.101 கோடிகளுடன் 5ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் ரூ.80 கோடிகளுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.

அவருக்கு அடுத்த படியாக டென்னிஸ் வீராங்கனை பிவி சிந்து ரூ.36 கோடிகளுடன் 20வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து ரோஹித் சர்மா 23வது இடத்திலும், ஹர்திக் பாண்டியா 27வது இடத்திலும், ரவிசந்திர அஷ்வின் 44 இடத்திலும் உள்ளனர்.