ஐபிஎல் போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த விராட் கோலி

மும்பை

டந்த 12 வருட ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அதிக தோல்விகளை சந்தித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2019 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அனியும் இடம் பெற்றுள்ளது. இந்த அணியின் தலைவராக விராட் கோலி உள்ளார். மேலும் இந்த அணியில் பல பிரபல கிரிக்கெட் வீரர்களான அப் டி வில்லியம்ஸ், சாஹல், பார்த்திவ் படேல், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆயினும் இந்த வருட தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விரோட் கோலியின் தலைமையிலான இந்த அணி வெற்றி பெறவில்லை.

நேற்று நடந்த போட்டியுடன் விராட் கோலி ஐ பி எல் போட்டிகளில் மொத்தம் 168 போட்டிகளில் 5110 ரன்கள் எடுத்து முதல் இடத்தை அடைந்துள்ளார். இதற்கு முன்பு சுரேஷ் ரைனாவின் 5086 ரன்கள் எடுத்திருந்த சாதனையை விராட் கோலி நேற்று முறியடித்துள்ளார்.

அதே நேரத்தில் விராட் கோலி மற்றொரு விதத்திலும் சாதனை படைத்துள்ளார். ஆனால் இது சற்றே சோகமான சாதனை ஆகும். விராட் கோலி தனது 12 வருட ஐபிஎல் அனுபவத்தில் அதிக போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார் என்னும் சாதனையையும் படைத்துள்ளார்.

விராட் கோலி தாம் கலந்துக் கொண்ட போட்டிகளில் 86 போட்டிகள் தோல்வி அடைந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ராபின் உத்தப்பா 85 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.