ஐசிசி ஒன்டே மேட்ச் தரவரிசைப் பட்டியல்: முதல் இடத்தில் கோலி, பும்ரா

சிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், இந்திய அணியின் பந்து வீச்சாளா் பும்ராவும் முதல் இடத்தில் உள்ளனர்.

விராட் கோலி

கிரிக்கெட் விரர்களின் தர வரிசை பட்டியலை அவ்வப்போது ஐசிசி  வெளியிட்டு வருவது வழக்கம். ஒரு நாள் மேட்ச், டெஸ்ட் மேட்ச், டி20 மேட்ச் போன்ற விளையாட்டுகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்தவர்கள் குறித்து வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று ஒன்டே மேட்சில் விளையாடி வீரர்கள் குறித்த தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில்,   இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், துணை கேப்டன் ரோகித் ஷா்மா 2வது இடத்திலும் உள்ளனா்.  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகள் சோ்த்து தொடா்ந்து முதல் இடத்தை தொடர்ந்து வருகிறார்.

அவருக்கு அடுத்தப்படியாக துணைகேப்டன் ரோகித் ஷா்மா 871 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்  ஷிகா் தவான் ஒரு இடம் முன்னேறி தரவரிசைப் பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளாா்.

பும்ரா

அதுபோல சிறந்த பந்து வீச்சாளா்கள் தரவரிசையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளா் பும்ரா 841 புள்ளிகள் சோ்த்து முதல் முறையாக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளாா்.

அவரை தொடர்ந்து இந்திய வீரர் குல்தீப் யாதவ் 723 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், சாஹல் 5வது இடத்திலும் உள்ளனா்.