விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமணம் நடந்தது

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் திருணம் இன்று இத்தாலியில் நடந்த்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாகவே இருவரும் காதலித்து வந்த்தாக பேச்சு  எழுந்த்து. ஆனால் இவர்கள் இது குறித்து வெளிப்படையாக ஏதும் தெரிவிக்கவில்லை.

தற்போது இலங்கை தொடரில் இருந்து கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் இத்தாலி சென்றார்.  அனுஷ்காவும் குடும்பத்தினருடன் இத்தாலி சென்றதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இன்று இருக்கும் இத்தாலியில் திருமணம் நடந்தது.

சென்றிருப்பதாகச் செய்தி பரவியது. இந்நிலையில் கோலி, அனுஷ்காவுக்கு நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாழ்த்துகள் விருஷ்கா என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. திருமணம் பற்றிய செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம்  உறுதிப்படுத்தியுள்ளது.